Sri Kanchi Kamakoti Peetam Chozhadesiya Oordhvasikha Brahmanal Bikshavandana Trust
Uniting Oordhvasikha Brahmanals in Guru Seva
Oordhvasikha Brahmana Parampara
உ
ஸ்ரீ குருப்யோ நம:
சோழியர்கள் என்றழைக்கப்படும்
ஊர்த்வசிகா ப்ராம்மணர்களின்
பண்டைய வரலாற்று குறிப்பு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அருள் வாக்குகளான "தெய்வத்தின் குரல்" 7 volume களாக வெளிவந்துள்ளன. நமக்கு வழிகாட்டியாக, பெருந்துணையாக, அந்த மாபெரும் பொக்கிஷங்கள் நம் சந்தேஹங்களை தெளிவுறச் செய்கின்றது. அதிலிருந்து சில குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
சிரஞ்சீவியான ஸ்ரீ பரசுராமரும் கேரள சரிதமும்:
(தெய்வத்தின் குரல் / பாகம்5 / பக்கம் 710,711)
பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்ரிய ராஜாக்களை ஸம்ஹாரம் செய்து அவர்களுடைய ராஜ்யங்களை எடுத்துக் கொண்டாரென்று புராணம் சொல்கிறது. லோகம் முழுக்க அவர் கைக்கு வந்துவிட்டது. அதேசமயம் அவருக்கு விரக்தியும் பச்சாதாபமும் ஏற்பட்டது. ப்ராஹ்மண ஜன்மா எடுத்தும் ஸாத்விகமாக ஊருக்கு நல்லது பண்ணாமல் இப்படிச் செய்து விட்டோமே! என்று ப்ராயச்சித்தமாக தம் கைக்கு வந்து விட்ட லோகம் முழுவதையும் கச்யப மஹரிஷிக்கு தானம் செய்து விட்டார். பிறகு கச்யபர் “தானம் செய்து விட்ட இடத்தில் இருக்காதே. இந்த நிலப்பரப்பின் எல்லையை தாண்டிப் போய் சேரு" என்று சொன்னார்.
பரசுராமர், ஸமுத்ர ராஜாவிடம், நான் லோக க்ஷேமத்திற்காக தபஸ் செய்து கொண்டிருக்கும்படி ஈஸ்வர ஆக்ஞை இருக்கிறது. அதனால் நீ மேற்கு தொடர்ச்சி மலைக்கு அந்தப் பக்கம் கொஞ்சம் விலகிப் போய், நான் வசிப்பதற்கு கொஞ்சம் நிலப்பரப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸமுத்ர ராஜாவும் பரசுராமரிடம், 'தங்கள் கையில் தாங்கள் தபஸிருந்து பரமேச்வரனிடமிருந்து பெற்ற பரசு (கோடாரி) இருக்கிறதல்லவா? அதை ஸமுத்ரத்தில் வீசி எறியுங்கள் எவ்வளவு தூரத்துக்கு ஜலம் எழும்பித் தெறிக்கிறதோ, அவ்வளவு தூரமும் நான் பின்வாங்கிக் கொண்டு தங்களுக்கான பூமி வெளிப்படும்படி செய்கிறேன்’ என்று சொன்னார்.
அப்படியே மஹாசக்தரான பரசுராமர் மலையுச்சியிலிருந்து ஸமுத்ரத்தின் மேல் பரசுவை வீச, அது ஸமுத்ரத்தில் விழுந்து மைல் தூரத்துக்கு வடக்குத் தெற்காகவும், அதைவிடக் குறைவாகக் கிழக்கு மேற்காகவும் ஜலம் எழும்பித் தெறித்தது. அந்தப் பரப்பளவு முழுவதிலுமிருந்து ஸமுத்ரம் பின்னுக்குப் போய் விட்டது. பூமி வெளிவந்தது.
அது தான் மலையாள தேசம்.
பரசுராமர் அதை நல்ல வைதிகமான புண்ய பூமியாக்க வேண்டுமென்று நினைத்தார். இத்தனாம் பெரிய நிலப்பரப்பு ஏற்பட்டுள்ள போது தாம் ஒருத்தர் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தால் மாத்ரம் போதாது. ஏராளமான ஸத் பிராம்மணர்களைக் குடியேற்றி, வைதிகானுஷ்டானங்கள் வளரும்படிச் செய்யணும் என்று நினைத்தார்.
சோழ தேசத்திலிருந்து சோழியர்கள் எனப்படும் பிராம்மணர்களை அழைத்து வந்து அங்கே அமர்த்தினார்.
அந்தப் பூர்வ காலத்தில் ஸுகஜீவிகளாக் காவேரி தீரத்திலிருந்த சோழியர்கள் மலையாளத்துக்குப் போனார்களா? அங்கே ஓயா மழையும், சகதியும், குறுக்கே குறுக்கே கழியுமாக (ஓடையுமாக) இருந்தது அவர்களுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. கோபக்காரர் என்று பேர் வாங்கின பரசுராமரிடம் சொல்லவும் பயம், அதனால் ரஹஸ்யமாகத் திரும்பி ஓடி வந்து விடலாமென்று நினைத்தார்கள்.
இவர்கள் இப்படி நினைப்பார்களென்று அவருக்கும் தெரியும். அதனால் என்ன நினைத்தாரென்றால், 'இவர்களுடைய ஆசாரங்களில் எதையாவது ஒன்றை மாற்றிவிடுவோம், அப்படிச் செய்துவிட்டால் இவர்கள் தாய் சீமைக்குத் திரும்பிப் போனால் அங்கே இருப்பவர்களுடன் கலந்த வாழ முடியாமல் போய்விடும். வேறு வழியில்லாமல் இங்கேயே இருந்து விடுவார்கள்' என்று நினைத்தார். ஆகையால் அவர்கள் குடுமியை பின்பக்கம் முடிந்து கொள்ளாமல் தலை உச்சியில் சேர்த்து 'ஊர்த்வசிகா' என்பதாக முடிந்து கொள்ளும்படிப் பண்ணினார். இன்றைக்கும் நம்பூதிரிகள் அந்த வழக்கத்தைத்தான் பின்பற்றுகிறார்கள்.
அந்த ஊர்த்வசிகா பிராம்மணர்களில் ரொம்பப் பேர் சோழ தேசத்துக்குத் திரும்பி விட்டார்கள். ஜனஸமூகமும் அவர்களை ப்ரியமாக வரவேற்று வைத்துக் கொண்டது. அந்தப் பிராம்மணர்களின் பரம்பரைக்கு உச்சிக்குடுமியே தங்கி விட்டது.
ஆதி தமிழகத்தின் அந்தணர்கள் : சோழியர்கள்
(தெய்வத்தின் குரல் / பாகம்5 / பக்கம் 713,714)
சோழியர்கள் ஆதி காலத்திலிருந்தே தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ் மக்களாகவே இருந்த ப்ராம்மணர்கள். த்ராவிட ப்ராம்மணர்கள். த்ராவிடரும் ப்ராம்மணரும் சத்ரு ஜாதிகள் இல்லை! த்ராவிட ஜாதி என்றும் ஒன்று இல்லை. த்ராவிட தேசம் தான் உண்டு. அதில் வசித்து வரும் ப்ராம்மணர் உள்பட எல்லாரும் த்ராவிடர்கள் தான். த்ராவிட தேசத்தில் இருந்து வட தேசத்திற்கு போய் ஸெட்டில் ஆன ப்ராம்மணர்களுக்கே இன்றைக்கும் வடக்கே ‘த்ராவிட்' என்ற பெயர் இருக்கிறது. இப்படி ஆதியிலிருந்தே தமிழ் ஜனங்களாக இருந்தவர்கள் தான் சோழிய ப்ராம்மணர்கள். அப்புறம் வடக்கிலிருந்தும் பல ப்ராம்மணர்கள் இங்கு வந்தார்கள். 'வடமர்' என்று அவர்களுக்கே பேர். (கைபர் கணவாய் வழியாக என்றைக்குமே எவருமே வரவில்லை! பாரத தேசத்துக்குள்ளேயே தான் ராஜயத்துக்கு ராஜ்யம் இடம் மாறுவது.) 'வடமர்' என்று ப்ராம்மணரில் ஒரு பிரிவை மட்டும் சொல்வதாலேயே மற்றவர்கள் என்றைக்குமே 'தென்னவர்'களாக இருந்தவர்கள்தான் என்று ஆகிறதல்லவா?
பாரத தேசம் முழுவதும் ஆதியிலிருந்து ஒரே இனம் தான். ஆரிய த்ராவிட இன பேதம் வெள்ளைக்காரன் divide and rule-ல் (பிரித்து ஆள்வதில்) கதை கட்டி விட்டது. அந்தக் கதையை நிஜம் என்றும், நிஜமான நம்முடைய சாஸ்திர, புராணங்களில் இருப்பதை கட்டுக் கதை என்றும் எண்ணி வருகிறோம்!
ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்ததும் சோழிய குலத்தில் தான்
தமிழ் தேசத்தில் கும்பகோண பஞ்சக்ரோச எல்லைக்குள் ஒரு சிவபுரம் இருக்கிறது. மலையாளத்தில் காலடிக்கு அருகே ஒரு சிவபுரம் (திருச்சூர்) இருக்கிறது. (தெய்வத்தின் குரல்/ பாகம்5 / பக்கம் 732-735) தமிழ் தேசத்திலிருந்து மலையாளத்துக்குப் போய் குடியேறியவர்கள் தங்களுடைய பூர்வீக ஊர்களின் பெயர்களையே அங்கே வைத்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்று இருக்கிறது.
அந்தத் திருச்சூரில் போய் பஜனம் இருந்து தான் ஆச்சார்யாளின் தாய் தந்தையர் ஈஸ்வரனிடமிருந்து வரம் பெற்று ஈஸ்வரனையே அவதாரப் புத்திரராக பெற்றது!
ஆச்சார்யாளுடைய தகப்பனார் பெயர் சிவகுரு. ரொம்பவும் பொருத்தமான பெயர். குரு என்றால் நேர் அர்த்தம் “பெரியவர்" என்பது. அதனால் உபதேசம் செய்பவரை மட்டும் குரு என்று சொல்லாமல் தகப்பனாரையும் குரு என்று சொல்வதே வழக்கம். ஆகவே சிவ அவதாரத்துக்குத் தகப்பனாராக இருந்தவருக்கு சிவகுரு என்ற பெயர் பொருத்தம் தானே? சிவகுரு என்ற பெயர் அபூர்வமாகத் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு ஊரைச் சுற்றி மட்டும் இந்தப் பெயர் சற்று அதிகம் அடிபடுகிறது. ஏனென்றால் கும்பகோணத்துக் கிட்டே பஞ்சக்ரோச எல்லைக்குள் உள்ள அந்த சிவபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஈச்வரனுக்கு சிவகுருநாத ஸ்வாமி என்பதே பெயர்!
மலையாள பிராம்மணருக்கு கும்பகோணத்துச் சிவபுரத்து ஸ்வாமியின் பேர் இருக்கிறது: அவர் பிள்ளைவரம் வேண்டி தவமிருந்தது மலையாளச் சிவபுரமான திருச்சூர் - என்பதிலிருந்து என்ன நிச்சயப்படுகிறது?
ஆதியில் கும்பகோணச் சிவபுரத்திலிருந்து பரசுராமர் அழைத்துக் கொண்டு போன சோழிய பிராமணர்கள் மலையாளத்தில் குடியேறின ஊர் தான் திருச்சூர் என்றும் அப்படிப்போன குடும்பம் ஒன்றின் வம்சத்தில் வந்தவர்தான் சிவகுரு என்றும் தீர்மானிக்கத் தோன்றுகிறது.
ஆக ஆச்சார்யாளின் ஆதி பூர்வீக மூதாதைகளே கும்பகோணம் வட்டாரத்துக்காரர்கள் தான் என்று ஊகிக்க முடிகிறது. இதைவிட அந்த ஊருக்கு (கும்பகோணத்திற்கு) என்ன பெருமை இருக்க முடியும்? அங்கே ஸ்ருஷ்டிக்கான அம்ருத கும்பம் வந்து தங்கினதை விட, ஸ்ருஷ்டியிலிருந்து விடுபட்டு அமரமான மோக்ஷத்தை அடைவிக்கும் அத்வைத அம்ருத கும்பத்தை லோகம் உள்ளளவும் ஜீவர்களுக்கு வற்றாமல் சுரக்கும் படியாக ஸ்தாபித்து வைத்து விட்ட ஆச்சார்யாள் அந்த க்ஷேத்ரவாசிகளின் வம்சத்தைத்தான் தேர்ந்தெடுத்து அவதாரம் பண்ணினாரென்பது அதன் மஹா பெருமை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளே ஸ்ரீ test 1 ஆதிசங்கரரின் மறு அவதாரம் என்று சொல்லும் வகையில், மேற்கூறிய ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதாரத்தை, அவரைத் தவிர வேறு யார் இவ்வாறு தெள்ளத் தெளிவாக நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதத்தில் எடுத்துரைக்க முடியும்!
உ
ஸ்ரீ குருப்யோ நம:
சோழிய குலத்தில் தோன்றிய
மகான்களும் பக்திமான்களும்
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 'தெய்வத்தின் குரல்’லிருந்தும், ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திரர் செய்த 'குரு ரத்ன மாலிகா'விலிருந்தும் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆச்சார்ய பரம்பரையில் முதலாவதாக ஸ்ரீ சங்கர பகபத்பாதாள் பின்னர் சில பீடாதிபதிகளும் ஊர்த்வசிகா பிராம்மணர்கள் என்பது தெளிவாகிறது.
பல பக்திமான்களும், அனுபூதிமான்களும் இதில் அவதரித்திருக்கிறார்கள் என்பது சான்றுகளோடு தெரிகிறது. நாயன்மார்களில் திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், மாணிக்கவாசகரும் தோன்றியது சோழிய குலத்தில் தான்.
புகழ்பெற்ற ராஜதந்திரியான சாணக்கியன் பூர்வசிகர் என்பதும் யாருக்கும் தெரிந்ததே.
வேதபாஷ்யம் செய்த ஸ்ரீ வித்யாரணியரும் ஊர்த்வசிக பிராமணரே. பாஷ்யத்தில் பல இடங்களில் த்ராவிட பாடத்தையே அனுஸரித்து பாஷ்யம் எழுதுகிறார்.
சைவத்துள் பன்னிரு திருமுறைகளையும் காப்பாற்றிய நம்பியாண்டார் நம்பி என்பவர் சோழியரே.
வைஷ்ணவத்துள் பெரியாழ்வார், சூடிக்கொடுத்த நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி, நாதமுனி முதலிய யாவரும் சோழிய பிராமணர்கள் தான்.
ஸ்ரீமத் ராமாயண வ்யாக்யான சக்ரவர்த்தி ஸ்ரீஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும் ஊர்த்வசிக பிராமணரே.
ஸர்வ வேதாந்த ஸாரமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலேயே மூழ்கிய ஸ்ரீஸ்ரீ ஆலங்குடி ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீ ஸ்வயம் ப்ரகாசானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளும் சோழிய குலத்தில் அவதரித்தவர் தான். (ஸன்யாச தர்மத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று இவரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளே கொண்டாடியிருக்கிறார்கள்.)
பிரபல கர்நாடக சங்கீத வித்வான் ஸ்ரீ செம்பை வைத்தியநாத பாகவதரும் சோழியர் தான்.
பரனூர் மகாத்மா ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளும் (ஸ்ரீஸ்ரீ அண்ணா) இந்த குலத்தில் அவதரித்தவர் தாம் என்பது நம் பெருமைக்குரிய விஷயம்.
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா
பரனூர் பெரியவா
“பிக்ஷாவந்தனம் செய்வீர்களா?”
என்று கேட்டு பிக்ஷாவந்தனம் பிரதி வருஷம் சிறப்புடன் நடக்க டிரஸ்ட் ஏற்படுத்துமாறு அறிவுரை வழங்கி, அந்த டிரஸ்ட்டிற்கு அவ்வாறே பெயர் வைத்தது மட்டுமன்றி, கருணைக்கடலான நமது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா,
“உங்களிலேயே மிகவும் பிரசித்தமாக கிருஷ்ண ப்ரேமி இருக்கிறார்.
அவரை ‘patron’ ஆகப் போட்டு டிரஸ்ட்டை ஏற்பாடு செய்யுங்கோ”
என்றும் சொன்னார்கள்.
டிரஸ்ட் விஷயமாக ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளுடன் அவர்களுடன் பெரியவாளை தரிசனம் செய்து கொண்ட போது, ஸ்ரீ ஸ்ரீ பெரியவா ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளுக்கு மலர்க் கிரீடம் அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார்கள். “ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்” ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பரம்பரையில் வந்தவர் என்றும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ராமாயண சாரத்தை அழகாக எழுதி இருப்பதாகவும் தெரிவித்து அவரை வெகுவாகப் புகழ்ந்து ஆசீர்வதித்தார்கள்
“தான் பெற்ற இறையின்பம் பெறுக இவ்வையகம்”
என்ற நற்சிந்தைக்கு ஏற்றவாறு பரோபகாரமும், தர்ம சிந்தனையும் மிகப் பெற்று இவ்வுலகம் உய்ய வழிகாடியவர்கள் சோழிய ப்ராஹ்மண குலத்தில் உதித்த மஹான்கள். அப்பேற்பட்ட குலத்தில் உதித்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளும் உதாரண புருஷராகத் திகழ்ந்தார். இக்கலியுகத்தில் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி பகவானை அடைய நாமசங்கீர்த்தனம் ஒன்றே வழி என்று திடமாகக் கூறி உலகம் உய்ய வழி காட்டினார்.
About the Trust
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகளே சரணம்
ஊர்த்வசிகா ப்ராமணாள் பிக்ஷாவந்தன ட்ரஸ்ட் உதயம்
11-9-1988 (ஞாயிறு)
இன்று சூரியக்ரஹணம், காஞ்சியை அடுத்த ஓரிக்கை என்ற இடத்தில் ஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் (Camp) முகாம். ஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் நெருங்கி பழகிய நம் சோழியாள் சமூகத்தினர் சிலர் (திருவல்லிக்கேணி ஸ்ரீ K.நாராயண அய்யர், சித்தூர் ஸ்ரீ V. கோபாலகிருஷ்ண அய்யர், ஸ்ரீ A.சுந்தரம், ஸ்ரீ T.R.கிருஷ்ணமூர்த்தி அய்யர், ஸ்ரீ குமரேசன் மற்றும் T.R.சுந்தரமூர்த்தி ஆகியோர் போயிருந்தோம்.
நம் சமூகத்தினரிடம் நாங்கள் மூன்று ஸன்யாசிகள் இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு ஒருநாள் பிக்ஷாவந்தனம் செய்வீர்களா? என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு, நம் சமூகத்தினரிடம், ஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு ஸ்வாதீனம்,ப்ரியம், அன்பு, கிருபை எல்லாம் இருக்கிறது. அதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் பண்ணினோமோ தெரியவில்லை.
அந்த தினத்தில் இருந்த எங்களுக்கு (ட்ரஸ்டிகள்) உடம்பெல்லாம் புல்லரித்தது. மயிர் கூச்சல் எடுத்தது. ஆனந்தம் ஆச்சர்யம் மேலோங்க கண்களில் நீர்மல்க, இன்னும் அந்த நிகழ்ச்சி மனக்கண்முன் நிற்கிறது.
ஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள், நாம் ஆசார்யாளுக்கு செய்ய வேண்டிய கைங்கர்ய கடமையை உணர்த்தி, நாம் ஸரேயசை அடைய வழிவகுத்து கொடுத்ததற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
ட்ரஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்னால், பிக்ஷாவந்தம் செய்ய, ஸ்ரீஸ்ரீ பெரியவாள் அனுக்ரஹித்ததால், பிக்ஷாவந்தனம் செய்தோம். சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.ஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு மலர் அபிஷேகம் செய்யும் பாக்கியமும் எங்களுக்கு கிடைத்தது.
இந்த பிக்ஷை ஏற்பாடானது, ஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் உத்தரவிட்டு, குறுகிய காலத்தில் நடந்ததால், எல்லோருக்கும் தெரிவிக்க முடியவில்லை.
20-9-1988
ஸ்ரீ சித்தூர் V.கோபாலக்ருஷ்ண அய்யர் வீட்டில் ட்ரஸ்டின் ஸ்ரீ K. நாராயண அய்யர், ஸ்ரீ A.குஞ்சிதபாதம், ஸ்ரீ A.சுந்தரம், ஸ்ரீ S. சிதம்பரம் அய்யர், ஸ்ரீ S.ஏகாம்பரம் ஆகியோர் மீட்டிங்கில் பங்குகொண்டனர்.
20-10-1988 விஜயதசமி
ட்ரஸ்டின் மெம்பர்கள் எல்லோரும் ஆரம்பிக்கப்போகும் ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளை தரிசனம் செய்தோம். ட்ரஸ்டுக்கு என்ன பெயர் வைப்பது என்று ஸ்ரீஸ்ரீ பெரியவாளைக் கேட்டதற்கு, "சோழ தேசிய ஊர்த்வசிகா ப்ராமணாள் பிக்ஷாவந்தன ட்ரஸ்ட்' என்று நாமகரணம் வைத்து, ஆரம்பிக்க அனுக்ரஹித்தார்கள்.
(ஸ்ரீ பரசுராமர் சோழியர்களுக்கென ஒரு ப்ரத்யேகமான அடையாளத்தை (Identity) அமைத்ததுக் கொடுத்தது அதாவது சிகையை, ஊர்தவ சிகாவாக மாற்றியது தான். காலப்போக்கில் அது மறைந்தாலும், ஞாபகப்படுத்தும் வகையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் அதையே ட்ரஸ்டின் பெயராக (வெறும் சோழியாள் பிக்ஷாவந்தன ட்ரஸ்டு என்றில்லாமல்) "சோழதேசிய ஊர்த்வசிகா ப்ராமணாள் பிக்ஷாவந்தன ட்ரஸ்ட்" என்று அவர் வாக்கினாலேயே மொழிந்து அருளியது சோழியர்களின் பெரும் பாக்கியம் எனவே கொள்ளலாம்.)
''உங்களிலேயே, மிகவும் ப்ரஸித்தமாக க்ருஷ்ணப்ரேமி இருக்கார், அவரை Patron ஆக போட்டு, ஒரு ட்ரஸ்ட் ஏற்பாடு செய்து வருஷா வருஷம் உங்கள் பிரவுக்காரர்கள், பிக்ஷையை செய்து வாருங்கள்" என்று சொன்னார்கள். ¶சித்தூர் ஸ்ரீ V.கோபாலகிருஷ்ண அய்யர், Managing Trustee என்றும், திருவல்லிக்கேணி ஸ்ரீ K.நாராயண அய்யர், பொக்கிஷதாரர் (Treasurer) என்றும், ஸ்ரீ A. சுந்தரம், செக்ரடரி என்றும் சொல்லிவிட்டார்கள்.
8-1-1989
ட்ரஸ்டிகள் காஞ்சிபுரம் போய், ஸ்ரீ மஹாஸ்வாமிகளை தரிசனம் செய்து, ட்ரஸ்ட் பத்திரத்தை காண்பித்து, ஆசீர்வாதம் வாங்கி வந்தோம்.
1-3-1989
ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள், K. நாராயண அய்யர், A.குஞ்சிதபாதம், A.சுந்தரம், சித்தூர் கோபாலகிருஷ்ண அய்யர் மற்றும் ட்ரஸ்டிகள், ஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை தரிசனம் பண்ணிக் கொண்டோம்.
ஸ்ரீஸ்ரீ பெரியவாள் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளுக்கு மலர் கிரீடம் அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். அவரை புகழ்ந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பரம்பரையில் வந்தவர் என்றும்,ஸ்ரீ பெரியவாச்சாள் பிள்ளை ராமாயணத்துக்கு விளக்கம் எழுதியிருப்பதாகவும், வைஷ்ணவகுரு ஸ்ரீமத் வேதாந்ததேசிகரே, ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை புகழ்ந்திருப்பதாகவும், ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை சோழியர் என்றும், ராமாயண ஸாரம், சோழியன் துப்பின சக்கை என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் தெரிவித்ததாகவும், ஸ்ரீஸ்ரீ பெரியவா தெரிவித்தார்கள். வ்யாக்யான சக்ரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவ்வளவு அழகாக ராமாயண ஸாரத்தை சொல்லியிருக்காராம்.
ட்ரஸ்ட்க்கு A. சுந்தரம் வசூல் பண்ணின ரூ.11,000 க்கு விபரம் கொடுக்கப்பட்டது. ஸ்ரீஸ்ரீ பெரியவாள் பெயர்களை படிக்கச் சொல்லிக் கேட்டார்கள்.
4-5-1989
பிக்ஷாவந்தன ட்ரஸ்ட் பத்திரம் இன்று மைலாப்பூர் S.R. ஆபீசில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
27-5-1989
ஸ்ரீ காஞ்சிமடத்துக்கு சென்றபோது, ஸ்ரீ A.சுந்தரம் ட்ரஸ்டி, ஸ்ரீஸ்ரீ பெரியவாளிடம் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளுக்கு டில்லியில் ஒரு கார் விபத்து ஆகி கால்நடக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
ஸ்ரீஸ்ரீ பெரியவாள் உடனே, தன் கழுத்தில் இருந்த பச்சை துளசிமாலையை கழற்றிக் கொடுத்து, அதை ஸ்ரீகிருஷ்ணப்பிரேமிக்கு அனுப்பும்படி க்ருபை பண்ணினார்கள்! அஹோ பாக்கியம்!" மாலையை Indian Airlines flightல் ஸ்ரீ K.நாராயண அய்யர் டில்லிக்கு உடனே அனுப்பினார். ஸ்ரீஸ்ரீ பெரியவாளின் கருணையோ கருணை!!
7-9-1989 வியாழன்,அனுஷம்
சோழியாள் ட்ரஸ்டின் முதல் சம்ஷ்டி பிக்ஷாவந்தனம்-காஞ்சியில் அப்பொழுது ட்ரஸ்டியும், ட்ரெஷரருமாக இருந்த ஸ்ரீமான் K.நாராயண அய்யரும் மற்ற ட்ரஸ்டிகளும் சேர்ந்து எல்லா ஏற்பாடுகளையும் முன்கூட்டியே ஆரம்பித்து மிகவும் சிறந்த முறையில் செய்தனர்.
ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் மேனாவுக்கு விசேஷமான புஷ்ப அலங்காரம், பூஜை மண்டபத்துக்கும் மற்ற இரண்டு ஸ்ரீ ஸ்வாமிகள் இடத்துக்கும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு புஷ்ப நாற்காலி அலங்காரம் செய்யப்பட்டு, அதில் அமர்ந்து 1 நிமிடம் பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் கொடுத்து, அனுக்ரஹமும் செய்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. Photoவும் எடுத்தோம்.
நிறைய அரிசி மூட்டைகள், மளிகை சாமான்கள், காய்கறி, பழங்கள், திருமாங்கலயம் 8 set, வஸ்த்ரம், சால்வைகள் எல்லாம் வாங்கி ஸமர்ப்பணம் செய்தோம்.
ஸ்ரீஸ்ரீ புது பெரியவாளும், ஸ்ரீஸ்ரீ பாலபெரியவாளும், நம் சமூகத்தினருக்கு 3 மணிக்கு அனுக்ரஹ பாஷணம் செய்தார்கள்.
காலை 5 மணிக்கும், மாலை 6 மணிக்கும், ஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் ஸ்ந்நிதியில் சித்தூர் ஸ்ரீ கோபாலகிருஷ்ண அய்யர் கோஷ்டியின் வயலின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
Trust Fundக்கு ரூ.80,000 கலெக்ஷன் ஆகி இருந்தது.ட்ரஸ்டின் முதலாவது பிக்ஷாவந்தன செலவு ரூ.20,000
ஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் திருப்தியையும் காண சந்தோஷமாக இருந்தது.
உ
॥ श्री गुरुभ्यो नमः ॥
Office Bearers
Sri Kanchi Kamakoti Peetam
Chozhdesia Oordhvasikha Brahmanal Bhikshavandanam Trust
|
Role |
Name |
|
|
Trust Founder |
Sri Krishna Premi Swamigal (Sri Sri Anna) |
|
|
Chairman |
Sri Hari Anna |
|
|
Patron |
Sri A Sundaram Ayyar |
|
|
Managing Trustee |
Sri S Swaminathan |
|
|
Trustee |
Sri N Krishnamurthy |
|
|
Trustee |
|
|
|
Trustee |
|
|
|
Trustee |
|
|
|
Secretary |
Sri Radhakrishnan |
|
|
Treasurer |
Sri K Jayaraman |
|
Our Mission
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஸர்வோத்க்ருஷ்டமான பூஜ்ய ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள், பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யாளுக்கும், வாழையடி வாழையாக அனைவருக்கும் குருவருள் கிடைக்குமாறு அனுகிரஹித்து பீடத்தை அலங்கரிக்க சிஷ்யராக ஸ்வீகரித்துக் கொள்ளப்பட்டவருக்கும் பக்திபூர்வமாக நம் சமூகத்தினர் பிக்ஷாவந்தனம் செய்ய, ஆக்ஞாபித்து, அனுக்ரஹித்த ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
நமக்குத்தான் அன்புக்கட்டளை இட்டிருக்கிறார்கள். வேறு யாருக்கும் கிடைக்காத அன்புக்கட்டளை. நம் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்.
நம் எல்லோருக்கும் மஹாபெரியவாள் குருவாக இருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் நாம் இருந்ததே மஹா புண்யம்.
நாமும், நம்முடைய சந்ததியினரும், வாழையடி வாழையாக இந்த அன்புக்கட்டளையை சிரமேற்கொண்டு, வருடந்தோறும் சாதுர்மாஸ்ய ஸங்கல்பமத்தியில் பிக்ஷாவந்தனம் இப்பொழுது செய்து வருவது போல் அதற்குமேலும் தொடர்ந்து செய்து வந்து, ஸர்வ மங்களங்களையும், ஸ்ரேயசையும், குரு அருளையும் பெறக்கடவது
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஸர்வோத்க்ருஷ்டமான பூஜ்ய ஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள், ஆஞாபித்தபடி பக்தியுடனும் சிரத்தையுடனும் குருவருளாலும் திருவருளாலும் தொடர்ந்து நடந்து வரும் பிக்ஷாவந்தனத்தில் நம் சமூகத்திலுள்ளோர் அனைவரும் ஈடுபட வேண்டும்.
நாம் மட்டுமன்றி நம் குடும்பத்தில் உள்ளோர் அனைவரையும் இக்கைங்கர்யத்தில் ஈடுபட வைக்க வேண்டும். வருங்கால சந்ததியினரான நமது குழந்தைகளுக்கும் நமது குலப் பெருமையையும் நம் குரு பரம்பரையையும் அறிமுகப்படுத்தி அவர்களையும் குருகிருபைக்குப் பாத்திமாக தயார் செய்தல் நம் கடமை
பிக்ஷாவந்தன கைங்கர்யத்தில் ஈடுபடும் வழிமுறைகள்
பிக்ஷாவந்தனம் செவ்வனே நடைபெற பணயுதவி செய்யலாம்
பிக்ஷாவந்தனம் செவ்வனே நடைபெற பொருளுதவி செய்யலாம்
பிக்ஷாவந்தன தினத்தன்று பிக்ஷாவந்தனம் நடைஎறும் இடத்திற்கு நேரில் வந்து உங்களால் இயன்ற வரை தேஹத்தினால்கைங்கர்யம் செய்யலாம்
பிக்ஷாவந்தன டிரஸ்ட் செவ்வனே நடைபெற உங்கள் திறமைகளை அளித்து உதவலாம்
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஸர்வோத்க்ருஷ்டமான பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகள், ஆஞாபித்தபடி பக்தியுடனும் சிரத்தையுடனும் குருவருளாலும் திருவருளாலும் தொடர்ந்து நடந்து வரும் பிக்ஷாவந்தனத்தின் மூலம் நம் சமூகத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ஊர்த்துவசிகா ப்ராஹ்மணாள் அனைவரும் ஒன்றுகூடி இத்தொண்டில் ஈடுபட்டு குருவளுக்குப் பாத்திரமாகி திருவருள் கூடி இவ்வுலகில் மேன்மை பெற்று விளங்க வேண்டும்
ஊர்த்துவசிகா ப்ராஹ்மணாள் என நாம் அனைவரும் நம் குலத்தைப் பெருமையுடன் கூறிக் கொள்ள வேண்டும். சோழியர்கள் என்று கூறிக் கொள்ள வெட்கப்படல் கூடாது.
What is Bhikṣāvandanam?
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர
பிக்ஷாவந்தனம்
பிக்ஷாவந்தனம் என்றால் என்ன என்று தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம்.
நாம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சார்யாளின் சிஷ்யர்கள். வந்தனம் என்றால் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிக்கொள்வது. பிக்ஷந்தனம் என்றால் ஆசார்யாளுக்கு பிக்ஷைபண்ணி வைத்து நமஸ்கரித்து ஆசீர்வாதத்தை பெறுவது. அன்றைய தினம் ஸ்ரீமடத்துக்கு வருபவர்களுக்கு சந்தர்பணை செய்தல் மடத்து சிப்பந்திகளுக்கு அன்றைய சம்பளம், மடத்தில் இருக்கும் பசுக்கள், யானை, முதலியவற்றின் ஜீவசம்ரக்ஷணை இவைகள் இதில் அடங்கும்,
ஆசார்யாளிடம் சென்று முறைப்படி வந்தனம் செய்து நம்முடைய பிக்ஷையை ஏற்றுக் கொள்ளும்படி ஒருநாள் முன்கூட்டியே ப்ரார்த்திப்பது.
ஸந்யாசிகளுக்கு பிக்ஷாவந்தனம் செய்து ஆதரிப்பது க்ரஹஸ்தனின் ஒரு முக்ய கர்மாவாகும். பல ஜன்மங்களில் செய்த புண்ய வசத்தால் தான் ஸந்யாஸ ஆச்ரம ப்ராப்தி ஏற்படுகிறது. ஸந்யாஸிகளை உபசரித்து, பிக்ஷையும் வந்தனமும் செய்தால், எல்லா தேவர்களையும் பூஜித்ததாகும். அதிலும் சாதுர்மாஸ்ய வ்ரத சமயத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகவும் விசேஷம்.
ஸந்யாஸிகள், பீடாதிபதிகள் ப்ரதி வருஷமும், ஆஷாட மாதம் (ஆனிமாதம் பௌர்ணமி அன்று வ்யாஸபூஜை செய்வார்கள். வ்யாஸ பூஜை முடிந்த பிறகு சாதுர்மாஸ்ய வ்ரதத்தை ஆரம்பிப்பார்கள். இது வர்ஷாகாலமாக இருப்பதால் பூமியில் சஞ்சாரம் செய்யும் ஜீவராசிகள் அதிகம் உண்டாகி சஞ்சாரம் செய்யும். ஸந்யாஸிகளுக்கு அஹிம்சை முக்கியம். அவர்கள் நடந்து யாத்திரை செய்வதால், ஜீவராசிகளுக்கு ஹிம்சை ஏற்படலாம். அதை தவிர்ப்பதற்காகவே 4 பக்ஷம் ஒரே இடத்தில் தங்கி நியமத்துடன் இருப்பார்கள்.
இந்த வ்ரதகாலத்தில், வேதாந்த விசாரம் செய்வார்கள்.
Bhikṣāvandana-Mahotsavam
Bhikṣāvandanam 2026
This section will present the details of the forthcoming Bhikṣāvandanam. It will introduce the significance of this year's Guru Seva, invite participation and provide all information required for devotees wishing to be a part of this sacred endeavour.
- Date
- To be announced
- Venue
- To be announced
- Jagadguru
- To be announced
- Registration
- Opening shortly
Additional announcements, programme schedule, registration details, volunteer information and other updates pertaining to the current Bhikṣāvandanam will be presented here.
Over the years, Bhikṣāvandanam has been performed in the divine presence of the Jagadgurus at various sacred locations. Each year reflects the devotion, dedication and collective Guru Seva of the Oordhvasikha community. A brief glimpse of these sacred milestones is presented below.
| Year | Place | Jagadguru | Volunteers | Brief | Gallery |
|---|---|---|---|---|---|
| 2026 | To be announced | To be announced | — | Upcoming Bhikṣāvandanam | View Gallery |
| 2025 | Placeholder | Placeholder | — | Placeholder summary | View Gallery |
| 2024 | Placeholder | Placeholder | — | Placeholder summary | View Gallery |
| 2023 | Placeholder | Placeholder | — | Placeholder summary | View Gallery |
| 2022 | Placeholder | Placeholder | — | Placeholder summary | View Gallery |
Sacred Memories
Offer Your Seva
श्रद्धया देयम् ।
May every offering be made with a devoted heart.”
— Taittirīya Upaniṣad
Support the Trust in preserving and nurturing the sacred tradition of Bhikṣāvandanam.
UPI ID
trustname@upi
| Account Name | Sri Kanchi Trust |
|---|---|
| Account Number | 1234567890123456 |
| Bank | State Bank of India |
| Branch | Kanchipuram Main Branch |
| IFSC | SBIN0001234 |
Need a Donation Receipt?
If you would like to receive a donation receipt, kindly contact us with your transaction details after making your contribution.
Contact UsContact Us
We'd Love to Hear from You
Whether you would like to know more about the Trust, Bhikṣāvandanam, volunteering opportunities, Sacred Memories, or require a donation receipt, we shall be happy to assist you.
Postal Address
Sri Kanchi Kamakoti Peetam
Chozhadesia Oordhvasika Braahmanal
Bhikshavandana Trust
Plot 357, Dr. Lakshmanaswamy Salai
K. K. Nagar
Chennai - 600078